நிறுவன வரலாறு

 

நிறுவனத்தின் சுருக்க விபரம்               

 

        வரலாறு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1421/23 ஆம் இலக்க 2005.12.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையின் மூலம் 2006 ஏப்பிரல் 15ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் துணுக்காய் பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

இவ் உள்ளூராட்சி மன்றத்தின் அதிகார பிரதேசம் சுமார் 326 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. இப் பிரதேசத்தில் சுமார் 12759 மக்களைக் கொண்ட 4242 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

 

இப் பிரதேச மக்களின் ஜீவனோபாயமாக விவசாயம் பிரதானமான தொழிற்துறையாக காணப்படுவதுடன் வணிகத்துறையும் முக்கிய பங்கை வகிக்கின்றன.

 

உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான  மக்கள் தொடர்ந்தும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக மின்சாரம், வீதி, சந்தை வசதிகளை மேம்படுத்துதல் வேண்டும்.

 

நிறுவனத்தின் நோக்கு, பணி, குறிக்கோள்

 

     நோக்கு 

கிடைக்கப் பெறும் வளங்களை உச்சளவில் பயன்படுத்தி பிரதேச சபையின் செயற்பாட்டின் மூலம் மக்களுக்கு உயரிய அமைப்பாக விளங்குதல்

 

     குறிக்கோள்

பிரதேச சபையின் எல்லைக்குள் மக்களது தேவைகளை இனங்கண்டு அவற்றை நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்திக் கொடுத்தல்

 

பிரதான பணிகள்

 

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் படி எமது பிரதேச சபையின் பிரதான தொழிற்பாடுகள் பின்வருவனவாகும்.

 

ஒவ்வொரு பிரதேச செயலக இடப்பரப்புக்குமென அமைக்கப்பட்ட பிரதேச சபையானது அத்தகைய இடப் பரப்புக்குள்ளான உள்ளூர் அதிகார சபையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் சுகாதாரம் பொதுப் பயன்பாட்டு சேவைகள் பகிரங்க பொது வழிகள் என்பன தொடர்பான கருமங்கள் எல்லாவற்றினதும் ஒழுங்குபடுத்துகையும் கட்டுப்பாடும் நிருவாகமும் அத்துடன் மக்களின் சௌகரியத்தையும் வசதியையும் சேமநலனையும் அத்தகைய இடப்பரப்பினுள் இருக்கும் வாழ்வசதிகள் எல்லாவற்றையும் பொதுவாகப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் அப்பிரதேச சபைக்குப் பொறுப்பிக்கப்பட்டதாக இருத்தலும் வேண்டும்.

 

 

 

Scroll to Top