துணுக்காய் பிரதேச சபையின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் 2023 ஆனது நினைத்தாலே இனிக்கும் ஒருநாள் எனும் கருப்பொருளுடன் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு.தே.கார்த்திகன் தலைமையில் சபைச் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் பிரசன்னத்துடன் 31.01.2024 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டதுடன்,
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எந்திரி கை.பிரகாஸ் (நீர்ப்பாசனத் திணைக்களம்-வவுனிக்குளம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.ச.கிருசாந்தன்(செயலாளர்-புதுக்குடியிருப்பு பிரதேச சபை) மற்றும் திரு.கா.சண்முகதாசன்(செயலாளர்-கரைதுரைப்பற்று பிரதேச சபை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன்
சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
படப்பிடிப்பு : திரு.ம.விமல்ராஜ்


