பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கைகோர்ப்போம் வாரீர்……………
ஆதனவரி தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல் துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுப்பு
மேற்படி கூட்டமானது துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் தலைமையில் 09.02.2024அன்று காலை 10.30மணியளவில் இடம்பெற்றதுடன்
மேற்படி கூட்டத்திற்கு வளவாளராக விலைமதிப்பீட்டாளர் விலைமதிப்பீட்டுத் திணைக்களம் வவுனியா அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அலுவலக உத்தியோகத்தர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலினை அதிகரிக்கும் வகையில் செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இம்முயற்சியானது ஏற்கனவே பெற்றுக்கொண்ட சபையின் அனுமதியுடன் இடம்பெறுவதுடன்
கீழ்க்குறிப்பிட்ப்படும் கிராம அலுவலர் பிரிவுகள் ஆதன வரிப்பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 2023.08.04ஆம் திகதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மல்லாவி
தேறாங்கண்டல்
யோகபுரம் மத்தி
அனின்சியன்குளம்
துணுக்காய்
எனவே பொதுமக்கள் அனைவரும் சபையின் இம்முயற்சிக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பினை நல்கி எமது பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கைகோர்க்க அன்புடன் அழைத்து நிற்கின்றோம்…
படப்பிடிப்பு : திரு.த.ரவிசாத்

