தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

துணுக்காய் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் “உலகம் வாசிப்போருக்கே சொந்தமானது” எனும் கருப்பொருளின் கீழ் துணுக்காய் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் 03.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு மு/யோகபுரம் தேசிய பாடசாலை மாணவர்களின் Band வாத்தியத்தினூடான அணி நடைபவனியுடனும் விருந்தினர்களை வரவேற்றலுடனும் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வானது துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக திரு.அ.சஞ்சீவன் (பிரதி கல்விப் பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம், துணுக்காய்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன்

சிறப்பு விருந்தினர்களாக திரு.செ.செல்வக்குமார்(செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை), திரு.ச.கிருசாந்தன்(செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை), திரு.கா.சண்முகதாசன் (செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை), நிர்வாக

உத்தியோகத்தர்(பிரதேச செயலகம், துணுக்காய்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கௌரவ விருந்தினர்களாக திருமதி.ரூ.கல்யாணி(சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு.து.யேசுதானந்தர் (அதிபர், மு/மல்லாவி தேசிய பாடசாலை), திரு.நவரட்ணராஜா (அதிபர், தென்னியங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை) திருமதி.ச.நிர்மலாதேவி (முன்பள்ளி இணைப்பாளர், துணுக்காய் வலயம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், பரிசில்கள் வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தென்னியங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவர்களின் “நியத்தின் நிழல்” எனும் நாடகத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே முடிவுற்றது.
படப்பிடிப்பு : திரு.ச.சயிந்கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top