பொது மக்களின் கைகளிற்குள் வருகைதந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத்தின் சேவைகள்.
வடக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வமான இணையத்தளபக்கமானது நேற்றையதினம் 01.03.2024 அன்று வடக்குமாகாண சபையின் கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் தற்கால தேவைப்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினை விரிவாக்கம் செய்து பொதுமக்களிற்கு சிறந்த சேவையினை வினைத்திறனாகவும் விரைவாகவும் வழங்கும்பொருட்டு UNDP-CDLG நிதி உதவித்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையப்பக்கம் உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண சபையின் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலர், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர், UNDP நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்,
வடமாகாண இறைவரி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவிஆணையாளர்கள், உள்ளூராட்சித் திணைக்கள செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் துணுக்காய் பிரதேச சபைக்கான இணையப்பக்கமானது சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.வை.ஜெகதீஸ்வரன் மற்றும் திரு.க.ரவிசாத் அவர்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவ் இணையத்தள உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.வை.ஜெகதீஸ்வரன் மற்றும் திரு.க.ரவிசாத் அவர்களுக்கு அவர்களது உன்னத சேவையினை பாராட்டி வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.R.வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
பொதுமக்கள் கீழ்வரும் லிங்கினை பயன்படுத்தி எமது சேவைகளினை வீட்டிலிருந்தவாறே அறிந்து கொள்ளலாம் என்பதினை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.




