பிரதேசத்தின் வளா்ச்சிக்கான இன்னுமொரு புதிய வேலைத்திட்டத்தினை 15-03-2024 அன்று ஆரம்பித்திருக்கும் துணுக்காய் பிரதேசசபையானது முதற்கட்டமாக அனின்சியன்குளம் கிராம அலுவலா் பிாிவில் ஆதனவாி தொடா்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டத்தினை அலுவலக உத்தியோகத்தா்கள் மூலம் 15.03.2024 தொடக்கம் முன்னெடுத்துள்ளது.
எனவே பொதுமக்கள் உங்களின் கிராம அபிவிருத்திக்கு எங்களுடன் இணைந்துகொள்வதுடன் தங்களது வீடுகளுக்கு வருகைதரும் எமது உத்தியோகத்தா்களுக்கு தங்களின் ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் கேட்டுக்கொண்டுள்ளாா்.


