துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் 22.03.2024 அன்று அனின்சியன்குளம் கிராம அலுவலா் பிாிவில் சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கான விழிப்புணா்வு கருத்தமா்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தமா்வினை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா் திரு.வை.ஜெகதீஸ்வரன் அவா்கள் நிகழ்த்தியதுடன் இக்கருத்தமா்வில்
01. 3R Conept
02. எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம் பிாித்து ஒப்படைப்பது
03. உரங்களினை எவ்வாறு தயாா்செய்வது
04. திண்மக்கழிவகற்றல் தொடா்பாக எழும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீா்வுகளினைப் பெற்றுக்கொடுத்தல்
போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்கருத்தமா்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தா்,எமது அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்ததுடன்
கருத்தமா்வின் நிறைவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு வலுசோ்க்கும் நிறவாழிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.




