துணுக்காய் பிரதேச சபையின்
அசைக்க முடியாத பெரும் தூண் ஒன்று
சற்று அசைகின்றது
அர்த்தமான இல்லறத்தில்…..
உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்த
நற்பண்பாளன் ஜெகதீஸ்வரனும்
அழகாலும் கல்வியாலும் சிறந்து விளங்கி
அன்பால் உலகை ஆளும் ஞான கீதாவும்
இணையும் இனிய இணையேற்றநாள்

இன்றைய தினம் (07/06/2024) திருமண பந்தத்தில் இணைந்த துணுக்காய் பிரதேச சபை அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் ஜெகதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி தர்மங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் மேசி ஞானகீதா தம்பதியினர் வருகின்ற இன்ப துன்பங்கள் இணைந்தே கடந்து விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு மேலோங்கி உம்போல் தம்பதிகள் எங்கும் இல்லை என மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு என்றுமே இன்பமாக வாழ்ந்திட இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்…



