ஜூன் 5 சர்வதேச சுகாதார தினத்தினை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களின் வழிகாட்டலின் கீழ்
மேற்படி மாபெரும் சிரமதான நிகழ்வின் முதலாவது கட்டமாக கடந்த 12-06-2024 புதன்கிழமை அன்று அப்பன் கடை சந்தியிலிருந்து துணுக்காய் பிரதேச சபையின் ஊழியா்களினால் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் சூழலை துப்பரவு செய்து எமது கிராமத்தை மேலும் அழகுபடுத்தி ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக எம்முடன் மல்லாவி வர்த்தக சங்கம், பொலிஸ் நிலையம், இராணுவத்தினர், சனசமூக நிலைம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மிருக வைத்திய அதிகாரி பணிமனை, பொது வைத்தியசாலை, பாடசாலை சமூகம், வங்கிகள், வர்த்தகர்கள், பொது மக்கள், மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து கொண்டனர்.






