வீதியின் குறுக்கே விழுந்த மரம்

2024.06.28ம் திகதி யோகபரம் மேற்கு கிராம அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள வீதிக்கு குறுக்காக விழுந்த மரம் பொதுமக்களின் பொதுபோக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்டதுடன் துணுக்காய் பிரதேச சபை செயலாளர் திரு.தே.கார்த்திகன் அவர்களின் பணிப்பிற்கமைய ஊழியர்களினால் அப்புறப்படுத்தப்பட்டது.
இதுபோன்ற இடையூறுகள் ஏற்படும்பட்சத்தில் தயவு செய்து எமது அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். தங்களுக்கான வினைத்திறனான சேவையினை ஆற்றுவதற்காக காத்திருக்கின்றோம்.

TENDER OPENING

PSDG நிதித்திட்டத்தின் கீழ் கடந்த 25-06-2024 அன்று ஆா்வமுள்ள ஒப்பந்ததாரா்களிடமிருந்து கீழ்வரும் வேலைத்திட்டத்திற்கான கேள்விகள் கோரப்பட்டன.
Construction of Kalvilan 3rd Link Lane
Construction of Segreation Centre at Kalvilan damping Lane
Renovation of Mallavi Therankandal Road
பிரதேச சபை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் கலந்து கொண்டனர்

ஆரோக்கியமான பிரயாணம்” எனும் தொனிப்பொருளில் பொது மக்களின் ஆரோக்கியமான ஒன்று கூடலை உறுதிப்படுத்தல்

துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களின் மேற்படி எண்ணக்கருவிற்கமைய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான பேரூந்து தரிப்பிடங்கள் மற்றும் பொது மக்கள் கூடுமிடங்கள் தினந்தோறும் துப்பரவாக்கப்படுவதுடன் வாரத்தில் இரு நாட்களுக்கு நீர் கொண்டும் சுத்தமாக்கப்பட்டு பொது மக்களின் ஆரோக்கியமான ஒன்று கூடல்களுக்கு வழிவகுக்கப்படுகின்றது.
மேலும் இச் செயற்பாடானது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுற்றுச்சூழல் அழகுபடுத்தல் செயற்றிட்டம் 2024

துணுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தங்களது அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தல் செயற்றிட்ட நிகழ்ச்சியானது துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களின் வேண்டுகோளுக்கிணங்க 13.06.2024 அன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மற்றும் அதனை அண்டிய சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்றதுடன்
மேற்படி நிகழ்ச்சியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள் அனைவரும் பங்கு கொண்டனர்
இந் நிகழ்ச்சித்திட்டத்தை சிறப்பாக செயற்படுத்தியமைக்காக துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களினால், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அலுவலர்களுக்கு MOH Mallavi நன்றியைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்து வரும் செயற்றிட்டங்களுக்கும் தங்களது பூரண ஆதரவுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

“எமது கிராமம் அழகானது” எனும் தொனிப்பொருளில் எமது கிராமத்தை மேலும் அழகுபடுத்தி ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையைக் கொண்டு செல்லுதல்.

ஜூன் 5 சர்வதேச சுகாதார தினத்தினை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களின் வழிகாட்டலின் கீழ்
மேற்படி மாபெரும் சிரமதான நிகழ்வின் முதலாவது கட்டமாக கடந்த 12-06-2024 புதன்கிழமை அன்று அப்பன் கடை சந்தியிலிருந்து துணுக்காய் பிரதேச சபையின் ஊழியா்களினால் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் சூழலை துப்பரவு செய்து எமது கிராமத்தை மேலும் அழகுபடுத்தி ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்காக எம்முடன் மல்லாவி வர்த்தக சங்கம், பொலிஸ் நிலையம், இராணுவத்தினர், சனசமூக நிலைம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மிருக வைத்திய அதிகாரி பணிமனை, பொது வைத்தியசாலை, பாடசாலை சமூகம், வங்கிகள், வர்த்தகர்கள், பொது மக்கள், மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து கொண்டனர்.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

துணுக்காய் பிரதேச சபையின்
அசைக்க முடியாத பெரும் தூண் ஒன்று
சற்று அசைகின்றது
அர்த்தமான இல்லறத்தில்…..
உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்த
நற்பண்பாளன் ஜெகதீஸ்வரனும்
அழகாலும் கல்வியாலும் சிறந்து விளங்கி
அன்பால் உலகை ஆளும் ஞான கீதாவும்
இணையும் இனிய இணையேற்றநாள்💐
இன்றைய தினம் (07/06/2024) திருமண பந்தத்தில் இணைந்த துணுக்காய் பிரதேச சபை அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் ஜெகதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி தர்மங்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றும் மேசி ஞானகீதா தம்பதியினர் வருகின்ற இன்ப துன்பங்கள் இணைந்தே கடந்து விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு மேலோங்கி உம்போல் தம்பதிகள் எங்கும் இல்லை என மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு என்றுமே இன்பமாக வாழ்ந்திட இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்…

அலுவலக நிதி உதவியாளா் திருமதி.கு.உசாந்தினி அவா்களின் பிாிவுபசார நிகழ்வு 31.05.2024

எமது அலுவலகத்தில் கடந்த 2020.02.274ம் திகதியில் இருந்து 2024.05.31ம் திகதி வரை துணுக்காய் பிரதேச சபையில் நிதி உதவியாளராக கடமையாற்றி சபையின் நிதி தொடா்பான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து மக்களுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்து பணிபுாிந்திருந்தாா்.
இடம்பெற்று முடிந்த வடமாகாண ஆசிாியா்சேவை பரீட்சையில் சித்தியடைந்து 2024.06.03ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மு.பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஆசிாியராக கடமையினை பொறுப்பேற்கவுள்ளாா்.
அவரது ஆசிரியா்பணியிலும் சிறந்து விளங்கி தனது ஆசிாியா்சேவையினை திறம்பட முன்னெடுத்து செல்ல பாராட்டி வாழ்த்துகின்றோம்.

உலக வங்கி நிதித்திட்டத்தின் உதவியுடன் மல்லாவி நகாில் Construction of Village Product Marketing Center at Mallavi Town(PT-III)

ஏற்கனவே முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்திற்கமைவாக உலக வங்கி நிதித்திட்டத்தின் உதவியுடன் மல்லாவி நகாில் Construction of Village Product Marketing Center at Mallavi Town(PT-III) கட்டுமானத்திற்காக தளம் இன்றையதினம் ஒப்பந்ததாரருக்கு கையளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை செயலாளா் திரு தே.காா்த்திகன், சபை உத்தியோகத்தா்கள் மற்றும் ஒப்பந்ததாரா் பங்குபற்றியிருந்தனா்.

உலக வங்கி நிதித்திட்டத்தின் உதவியுடன் மல்லாவி நகாில் Construction of Local Product Trade Center

ஏற்கனவே முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்திற்கமைவாக உலக வங்கி நிதித்திட்டத்தின் உதவியுடன் மல்லாவி நகாில் Construction of Local Product Trade Center at Mallavi Town(BT-IV) கட்டுமானத்திற்காக தளம் இன்றையதினம் ஒப்பந்ததாரருக்கு கையளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா் திரு.ச.யசிந்தன் மற்றும் துணுக்காய் பிரதேச சபை செயலாளா் திரு தே.காா்த்திகன் மற்றும் சபை உத்தியோகத்தா்கள் பங்குபற்றியிருந்தனா்…

PSDG நிதியிலிருந்து கல்விளான் 5ம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள்

PSDG நிதியிலிருந்து கல்விளான் 5ம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே.காா்த்திகன் தலைமையில் சபை உத்தியோகத்தா்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
Scroll to Top