2024ஆம் ஆண்டிற்கான மல்லாவி பொதுச்சந்தை மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஏலக்கூறலானது துணுக்காய் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 15.12.2023 அன்று பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.கார்த்திகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அவ் ஏலக்கோரலில் விநாயகமூர்த்தி பரமகுருநாதர் என்பவரினால் அதிகமாக 1,670,000.00 ரூபா கேட்கப்பட்டு துணுக்காய் பிரதேச சபையினால் அவருடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஏலக்கோரலில் வருமானப்பரிசோதகர் விடய உத்தியோகத்தர் மற்றும் ஏலதாரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எமது பிரதேச சபையின் அரும்புகள் முன்பள்ளியின் பிரிவுபசார விழாவும் ஒளிவிழாவும் 2023 நிகழ்வானது 21.12.2023 அன்று முன்பள்ளி ஆசிரியர் திருமதி நிலாந்தினி அவர்களின் தலைமையில் அரும்புகள் முன்பள்ளியில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் துணுக்காய் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

துணுக்காய் பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் பாதீடு தயாரித்தலின்போது பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்று அதனை எவ்வாறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதீடுகளில் உள்வாங்குவது தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்று The Asia Foundation இன் அனுசரணையுடன் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டையினை எவ்வாறு பயன்படுத்துவது எனும் தலைப்பின் கீழ் துணுக்காய் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 22.12.2023 சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்பயிற்சி பட்டறையில் வளவாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

துணுக்காய் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் “உலகம் வாசிப்போருக்கே சொந்தமானது” எனும் கருப்பொருளின் கீழ் துணுக்காய் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் 03.01.2024 அன்று காலை 10.00 மணிக்கு மு/யோகபுரம் தேசிய பாடசாலை மாணவர்களின் Band வாத்தியத்தினூடான அணி நடைபவனியுடனும் விருந்தினர்களை வரவேற்றலுடனும் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வானது துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம விருந்தினராக திரு.அ.சஞ்சீவன் (பிரதி கல்விப் பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம், துணுக்காய்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன்
சிறப்பு விருந்தினர்களாக திரு.செ.செல்வக்குமார்(செயலாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை), திரு.ச.கிருசாந்தன்(செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை), திரு.கா.சண்முகதாசன் (செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை), நிர்வாக
உத்தியோகத்தர்(பிரதேச செயலகம், துணுக்காய்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கௌரவ விருந்தினர்களாக திருமதி.ரூ.கல்யாணி(சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு.து.யேசுதானந்தர் (அதிபர், மு/மல்லாவி தேசிய பாடசாலை), திரு.நவரட்ணராஜா (அதிபர், தென்னியங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை) திருமதி.ச.நிர்மலாதேவி (முன்பள்ளி இணைப்பாளர், துணுக்காய் வலயம்) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், பரிசில்கள் வழங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தென்னியங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவர்களின் “நியத்தின் நிழல்” எனும் நாடகத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே முடிவுற்றது.
படப்பிடிப்பு : திரு.ச.சயிந்கோபி
டெங்கு வாரம் வெற்றிகரமாக துணுக்காய் பிரதேச சபையினால் அனுஸ்டிப்பு
துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு அ.பாலகிருபன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் துணுக்காய் பிரதேச சபையினால் இவ்வாரம் டெங்குவாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்படுவதுடன் பிரதேச சபையின் ஆளுகைக்குட்டபட்ட வீடுகளிலிருந்து டெங்கு பரவுவதற்கான கொள்கலன்களை அகற்றும் செயற்பாடும் நடைபெற்று வருகின்றது.
தைத்திருநாள் கொண்டாட்டம் 2024 துணுக்காய் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கத்தினரால் கடைப்பிடிப்பு
துணுக்காய் பிரதேச சபை அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச்சங்க தலைவர் திரு.தே.கார்த்திகன்(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) அவர்களின் தலைமையில்
சபைச் செயலாளர் திரு.அ.பாலகிருபன், ஆயர்வேத மருத்துவர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பிரசன்னத்துடன் தைத்திருநாள் பொங்கல் நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
உலக இயக்கத்திற்கும் உயிர்வாழ்விற்கும் அடிப்படையாக திகழும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக சம்பிரதாய முறைப்படி பொங்கல் பொங்கி படைக்கப்பட்டது.
தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்று போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு ஊழியர் நலன்புரிச்சங்கத்தினரால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.